விலைவாசி உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தமிழ்நாடு மாநில தலைவர் கே கே எஸ்எம் தெஹ்லான் பாகவி வெளியிட்ட கண்டன அறிக்கையில்,
மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவில் 7 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி பொதுமக்களின் மீது கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மாத்திரம் 17 முறை பெட்ரோலிய பொருட்களின் மீது விலை உயர்வை அறிவித்துள்ளது.
கூடங்குளம் போராட்டம் உட்பட மக்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கும் மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மே 25ல் SDPI சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது,
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.
பொதுவாக நேர்மறையான ஆக்கபூர்வமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் குறிப்பாக தலித் சமுதாய மக்களிடையே நல்ல தாக்கங்களையும் ஏற்படுத்தும் ஊடகவியலாளர்களின் படைப்புகளுக்கு, விருதுகள் வழங்கி சிறப்பிக்க SDPI மாநில தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.